கோடை காலத்தில் காரில் வைக்க கூடாத பொருட்கள் /அடடா காரில் இந்த பொருட்கள் வைத்தால் இவ்ளோ ஆபத்துகள் ஏற்படுமா ?

கோடை காலத்தில் காரில் வைக்க கூடாத பொருட்கள்

கோடை காலத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் திடீரென தீவிபத்து ஏற்படுவதுண்டு. வெயிலில் நிறுத்தப்பட்ட கார் தீப்பற்றி எரிவது, சாலையில் செல்லும் காரில் தீப்பிடிப்பது, கார் கண்ணாடி உடைவது போன்ற சம்பவங்கள் நடக்கும். வாகன ஓட்டிகள் அலட்சியமாக செய்யும் சின்னச்சின்ன விஷயங்கள் தான் இதற்கு காரணம் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. வெயில் காலத்தில் பிரச்னைக்குரிய பொருட்கள் சிலவற்றை காரில் வைத்திருந்தால் அவை ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும்அவர்கள் எச்சரிக்கிறார்கள். அத்தகைய பொருட்களில் சில…
Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
கோடையில் பலரும் சன்ஸ்கிளாஸ் அணிவது வழக்கம். ஆனால் கார் ஓட்டும் போது பலரும் அதை உபயோகிக்க மாட்டார்கள். காரின் டேஷ்போர்டில் வைத்திருப்பார்கள். காரை வெயிலில் நிறுத்தும்போது கண்ணாடி வழியாக காருக்குள் புகும் வெப்பம் காரமாக சன்கிளாஸ்கள் தீப்பிடித்து எரிய வாய்ப்பிருக்கிறது. பிளாஸ்டிக் பிரேம் கொண்ட கண்ணாடிகளை அதே போன்று கையாளும்போது சூரிய வெப்பத்தில் அவை உருகி விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு.
புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் பலரும் லைட்டரை உடன் வைத்திருப்பார்கள். அதனை ஒருபோதும் காரில் வைத்திருக்கக் கூடாது. கார் அதிக நேரம் வெயிலில் நின்றால் லைட்டரில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
கார்களில் மதுபாட்டில்கள் மற்றும் கேன் வடிவிலான குளிர் பானங்களை வைத்திருப்பதும் ஆபத்தானது. அதிக வெப்ப நிலையில், கார்பனேற்றப்பட்ட பானங்கள் வெடிக்கக்கூடும். மேக்கப் கிட், லிப்ஸ்டிக் போன்ற சில மேக்கப் பொருட்களை காரில் வைக்கக்கூடாது. ஏனெனில் அவை அதிக வெப்பநிலையில் எறியக்கூடியவை. வெயிலில் உருகிவிடவும்.
சானிடைசர்களில் அதிக ஆல்ஹகால் கலந்திருக்கும். அதிக வெப்பமான சூழலில் அவையும் வெடிக்கும் அபாயம் இருக்கிறது. அதனால் வெயிலில் நிறுத்தப்படும் காரில் சானிடைசர்களை வைக்காமல் இருப்பதுநல்லது.
கோடை காலத்தில் காரில் வைக்க கூடாத பொருட்கள்
அறை வெப்பநிலையில் இருக்கும் வரை பிளாஸ்டிக் பாட்டில்களின் வடிவம் மாறாது. ஆனால் காரில் அதிக நேரம் வைத்திருந்தால் எளிதில் உருகும். காரில் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை மீண்டும் பருகக்கூடாது. ஏனெனில் பாட்டில் சூடாகி இருந்தால், பாட்டில் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் தண்ணீரில் கலந்து நச்சுப் பொருட்களாக மாறி உடலுக்குள் நுழையும். கிரையான்கள், வண்ணப் புத்தகங்கள்போன்றவை காரில் பயணிக்கும் குழந்தைகளை மகிழ்விக்கக்கூடியவை. கிரையான்களை திறந்த நிலையில் தவறுதலாக காருக்குள் போட்டுவிட்டால் வெப்பத்தில் அவை உருகலாம். சில சமயங்களில் எரியவும் செய்யலாம்.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
எம்பி3 பிளேயர்கள், கேமராக்கள், ஜி.பி.எஸ். தொடர்புடைய மின் சாதனங்களை ஒருபோதும் காரில் விட்டுவிட்டு செல்லாதீர்கள். அவை மீது அதிக வெப்பம் விழும்போது மோசமான விளைவை ஏற்படுத்தும். லென்ஸ்கள், மெமரி கார்டுகள் சூடானால் சில நிமிடங்களில் சேதமாகிவிடும். பேட்டரிகளை காரில் விட்டு செல்வதும் ஆபத்தானது. அதில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் அமிலம் வெப்பத்தில் கசிந்து கண் மற்றும் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். சுவாசத்திற்கும் இடையூறு விளைவிக்கும்.
பெரும்பாலான மருத்துவ பொருட்களை அறை வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும். அவற்றை காரில் எடுத்து செல்லும்போது அதிக வெப்பத்தில் அதன் மூலக்கூறு அமைப்பு மாறும். அதனை உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும். மருந்து, மாத்திரை சாப்பிடுபவர்கள் காரில் எடுத்து செல்வதற்கு ஏற்ப அதன் வெப்ப நிலையை சீராக பராமரிக்கும் விதத்தில் பேக்கிங் செய்திருக்க வேண்டியது அவசியம். அதற்குரிய சாதனங்களில் மருந்து,மாத்திரைகளை சேமித்து வைக்கலாம்.
Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook